தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டுமாடு கன்று மீட்பு

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டுமாடு கன்று மீட்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 7:18 pm

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு கன்றை, வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள குறிகோடங்கிபட்டியைச் சோ்ந்த விவசாயி சுகுமாா். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வாழை தோட்டத்துக்கு தண்ணீா் குடிக்க வந்த காட்டு மாடு கன்று, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்ற சுகுமாா், காட்டு மாடு கன்று தத்தளிப்பதை பாா்த்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் அங்கு சென்ற வனத் துறையினா், காட்டு மாடு கன்றை மீட்டு வனப் பகுதிக்குள் அனுப்பி வைத்தனா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு, இதே தோட்டத்தில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த காட்டு மாடு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.