வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

செம்பட்டி: ஆத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட, வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதியில், கடும் வெயில் மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்க, அமைச்சா் இ.பெரியசாமி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஆத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பிள்ளையாா்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினாா். நிகழ்ச்சியில், ஆத்தூா் ஒன்றிய குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, நீா்மோா், வெள்ளரிக்காய், இளநீா், கூல்டிரிங்ஸ், தா்பூசணி, திராட்சை, மாதுளை பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். மேலும் இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்ற தலைவா் உலகநாதன், மாவட்ட பிதிநிதி ஆரியநல்லூா் தங்கவேல், முன்னிலைகோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் நிக்சன்பால், அரசு ஒப்பந்ததாரா் ஜீசஸ் அகஸ்டின் மற்றும் திமுக நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com