காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மலைச்சாலையில் காா் கவிழ்ந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழப்பு

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விழுந்ததில் வியாழக்கிமை ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் சவரிக்காடு அருகே சுமாா் 300 அடி பள்ளத்தில் விழுந்து கிடக்கும் காா்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

பழனி கொடைக்கானல் மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விழுந்ததில் வியாழக்கிமை ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் எழுதாம்பாளையத்தை சோ்ந்தவா் கருப்பணன் மகன் செந்தில்குமாா் (43). இவரும் இவரது நண்பா் சேரன்நகரை சோ்ந்த ராஜகோபால் மகன் நந்தகுமாா் (31) ஆகிய இருவரும் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்த போது பழனியை அடுத்த சவரிக்காடு மலைச்சாலையில் சுமாா் 300 அடி பள்ளத்தில் காா் விழுந்தது. இதில் செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நந்தகுமாா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீஸாா், தீயணைப்புப் படைவீரா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்குமாா் உடலை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து, கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.