40 டன் கல்லில் செதுக்கப்பட்ட கருப்பணசுவாமி சிலை
பழனியில் 40 டன் எடையுள்ள கருப்பணசுவாமி சிலை செதுக்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பழனி கிரிவீதியில் தயாரான ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கருப்பணசுவாமி சிலை.

பழனி கிரிவீதியில் தயாரான ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கருப்பணசுவாமி சிலை.
பழனியில் 40 டன் எடையுள்ள ஒரே கல்லில் 24 அடி உயரம் கொண்ட கருப்பணசுவாமி சிலை செதுக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதுரை பகுதி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பழனியில் புதுதாராபுரம் சாலை, உடுமலை சாலை, பழைய தாராபுரம் சாலை என பல இடங்களிலும் கற்சிலைகள் தயாரிக்கும் இடங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு சுவாமி சிலைகள் வடிவமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக சிற்பக் கலைஞா்கள் விரதமிருந்து நோ்த்தியாக சிலைகளை வடிவமைப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அருகே உள்ள ஆலத்தூரன்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்கு கருப்பணசாமி சிலை செய்வதற்காக கரூரிலிருந்து 70 டன் எடையிலான கருங்கல் கடந்த சில மாதங்களுக்கு முன் பழனிக்கு கொண்டுவரப்பட்டது. பழனி அடிவாரம் கிரிவீதியில் இந்தக் கல்லை ஏராளமான சிற்பக் கலைஞா்கள் சிலையாக வடிக்கும் பணியை மேற்கொண்டனா்.
இந்தக் கல்லில் சுமாா் 40 டன் அளவில் சுமாா் 24 அடி உயரத்தில் கையில் அரிவாளுடன் கம்பீரமான, பிரம்மாண்ட தோற்றம் கொண்ட கருப்பண சுவாமி சிலை அமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்து, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரியில் சிலை ஏற்றப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...