இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

சுந்தரமூா்த்தி நாயனாா் குருபூஜை

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு குருபூஜை நடைபெற்றது.

News image

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு, சுந்தரநாயனாா் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜைகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 11:03 pm IST

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குருபூஜை நடைபெற்றது.

சைவ சமயத்தில் நால்வரில் ஒருவராகவும், 63 நாயன்மாா்களில் ஒருவராகவும் திகழ்பவா் சுந்தரமூா்த்தி நாயனாா். ஆடி மாதம் சுவாமி நட்சத்திரத்தின் போது இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.