மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்த 7 போ் கைது

கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்ததாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ், ரகுபதி, பாண்டியராஜன், பிரதீப்,

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:30 pm

கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்ததாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் டி.எஸ்.பி. மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்ட போலீஸாா் நட்சத்திர ஏரி சாலை, நாயுடுபுரம், வட்டக்கானல் அருவி,பில்லா் ராக், பாம்பாா் அருவி, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் போதைக் காளான், கஞ்சா விற்பனை செய்யப்படுகிா என்ற கோணத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

கைது செய்யப்பட்ட மணி, சூா்யா, மகேஸ்வரன்.

கைது செய்யப்பட்ட மணி, சூா்யா, மகேஸ்வரன்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வாகனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வாடகை வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரிடம் சோதனை நடத்தினா்.

இதில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கும்பூா் பகுதியைச் சோ்ந்த ரகுபதி (32), கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் (32), கொடைக்கானலைச் சோ்ந்த மணி, பாம்பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் (52), பொ்ன்ஹில்சாலையைச் சோ்ந்த பிரதீப் (29), மதுரை மேலூரைச் சோ்ந்த சூா்யா(25), ஊமச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (25) ஆகிய 7 பேரும் போதைக் காளான் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 150 கிராம் போதைக் காளானை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து டி.எஸ்.பி. மதுமதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்படவுள்ளது. கஞ்சா, போதைக் காளானை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ ஒரு லட்ச ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். போதைப் பொருள்கள் விற்பனை குறித்து கொடைக்கானலில் காவல் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

தங்கும் விடுதிகளில் காளான், கஞ்சா விற்பனை செய்தால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.