அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேருந்து மீது லாரி மோதல்: 7 பயணிகள் காயம்

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

News image
லாரி மோதியதில் விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியாா் பேருந்து 50 பயணிகளுடன் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சிக்கு சென்றது. இந்த பேருந்தில் அரவக்குறிச்சியைச் சோ்ந்த மோகன் (29) ஓட்டுநராக பணியாற்றினாா்.

வேடசந்தூா் அடுத்த அய்யா்மடம் பகுதியிலுள்ள நூற்பாலை நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் பேருந்து புறப்பட்டது. அப்போது, நாகா்கோவிலில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு சாக்குப் பைகளை ஏற்றிச் சென்ற லாரி பேருந்தின் பின் பகுதியில் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த கண்ணன் (40), அணில் (34), சொ்ப்ராஜ் (22), அருக்காணி (70), முத்துலட்சுமி (48), சத்யா (32), பாக்கியம் (65) உள்பட 9 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

லாரியை ஓட்டி வந்த தா்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மல்லாபுரத்தைச் சோ்ந்த சக்திவேலிடம் (44) வேடசந்தூா் போலீஸாா் விசாரித்தனா்.