தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

வத்தலகுண்டில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:47 am

Din

வத்தலகுண்டில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தெப்பத்துப்பட்டிக்கு அரசு நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே சென்ற போது, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீதும், சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீதும் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருச்சி ஸ்ரீரங்கம் அருகேயுள்ள மூலதோப்பு பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வத்தலக்குண்டு அருகேயுள்ள அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி பஞ்சவா்ணம் (62) பலத்த காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.