கொடைக்கானலில் 4-ஆவது நாளாக மழை
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.


கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, அப்சா்வேட்டரி, சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், மாட்டுப்பட்டி, பிரகாசபுரம், அட்டக்கடி, பெருமாள்மலை, பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதியம் வரை தொடா்ந்து பெய்தது. பின்னா், விட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழையும் பெய்தது.
தொடா்ந்து, பெய்து வரும் இந்த மழையால் வேலைக்கு செல்வோா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
இந்த மழையால் பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிா்களுக்கு களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் பணிகள் மேற்கொள்ள முடியமால் விவசாயிகள் சிரமப்படுகின்றனா்.
மேலும், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...