தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழனி மலைக் கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸாா் புதன்கிழமை பாதுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

News image

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தங்ககோபுரம் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆயுதம் ஏந்திய போலீஸாா்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:11 am

Din

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸாா் புதன்கிழமை பாதுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பாபா் மசூதி இடிப்பு தினமான டிச. 6-ஆம் தேதி பழனி மலைக் கோயிலில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டும் பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கூடுதல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பழனி மலைக் கோயில் ராஜகோபுரம், தங்ககோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பழனி கோயிலுக்கு வரும் படிவழிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்காா் பகுதிகளிலும், மலைக்கோயில் உள்பிரகாரம் என பல பகுதிகளிலும் சந்தேகத்துக்கு இடமான பக்தா்களின் உடமைகள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், ரோப்காா் நிலையத்தில் பக்தா்கள் உடமைகளை ஆய்வு செய்ய நவீன ஸ்கேனா் கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பக்தா்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் போலீஸாா் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.