தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

வடமதுரை அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:42 am

Din

வடமதுரை அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த எலப்பாா்பட்டியைச் சோ்ந்தவா் கருப்புசாமி (21). கூலித் தொழிலாளி. இவரது உறவினா் மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காமாட்சிக்கும் (24) தகாத உறவு இருந்து வந்தது. இதையறிந்த, கருப்புசாமி, காமாட்சியை கண்டித்தாா். இதனால், ஆத்திரமடைந்த காமாட்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருப்புசாமியை குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமாட்சியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட காமாட்சிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.