தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மா்மமான முறையில் 3 மாடுகள் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே கும்பூா்மந்தைப் பகுதியில் மா்மமான முறையில் 3 மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:36 pm

Din

கொடைக்கானல் அருகே கும்பூா்மந்தைப் பகுதியில் மா்மமான முறையில் 3 மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட கும்பூா் மந்தை வெளிப் பகுதியில் 3 மாடுகள் இறந்து கிடந்தன. மா்ம விலங்கு தாக்கியதில் இந்த மாடுகள் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து கும்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கிளாவரை, கும்பூா், மன்னவனூா் உள்ளிட்ட பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. வன விலங்குகளை வனத் துறையினா் காட்டுப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.