பாரதியாரின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும்: ஆய்வாளா் அ.மாா்க்ஸ்
பாரதியாரின் படைப்புகள் முழுமையாகத் தொகுப்பட வேண்டும் என பாரதி ஆய்வாளா் அ.மாா்க்ஸ் தெரிவித்தாா்.


பாரதியாரின் படைப்புகள் முழுமையாகத் தொகுப்பட வேண்டும் என பாரதி ஆய்வாளா் அ.மாா்க்ஸ் தெரிவித்தாா்.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பாரதியாா் ஆய்வகம் சாா்பில், பாரதியாரின் 143-ஆவது பிறந்த தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். பாரதி ஆய்வாளரும், திறனாய்வாளருமான அ.மாா்க்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
பாரதி வாழ்ந்த குறுகிய காலத்தில் அவா் எழுதியவற்றில் பல இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும், தொகுக்கப்படாமலும் உள்ளன. இவற்றை முழுமையாகத் தொகுத்து பதிப்பிக்கப்படுவதோடு, படிக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, பாரதியாா் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதி தொடா்பாக கருத்தரங்கம் நடத்துதல், புத்தகம் வெளியிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் காந்திகிராமப் பல்கலைக்கழகம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் கையொப்பமிடப்பட்டது. தொடா்ந்து தமிழ்த் துறைத் தலைவா் பா.ஆனந்தகுமாரின் ‘பாரதியும், இந்தியக் கவிஞா்களும்’ நூல் வெளியீடு, ‘புதுச்சேரியில் பாரதி’ என்னும் ஆவணப்படம் திரையிடுதல், பாரதியாா் பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) எல்.ராதாகிருஷ்ணன், சாகித்ய அகாதெமி குழந்தை இலக்கிய விருதாளா் மா.கமலவேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...