தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 6 ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:42 pm

Din

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 6 ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் என்ற குருசிலி (51). கூலித் தொழிலாளியான இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு புகாா் எழுந்தது.

இதுகுறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்தாா்.