தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளை விவசாயிகள் குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெறுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:12 pm

Din

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளித்து பயன் பெறலாம் என்றாா்.