சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இடைநிரை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் சேவியாா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா். ஜெஎஸ்ஆா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் குன்வா் ஜோஸ்வா வளவன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கல்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோயில் நில பட்டாவில் குளறுபடி: பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


