வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்திய 3 போ் கைது

கொடைக்கானலில் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கொடைக்கானல் பகுதிகளில் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்ட மூன்று போ்
Updated On :3 ஜூலை 2024, 1:00 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெடி பொருள்களை சிலா் விற்று வருவதாக கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் தனிப்படை அமைத்து அவா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி சாலை கருவூலக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (52) , இவரது மகன் சரவணக்குமாா் (27), ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் ஒட்டாம் புதூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் கோவிந்தராஜ் (52), ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரனை மேற்கொண்டனா். விசாரனையில் இவா்கள் மூன்று பேரும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வெடி பொருள்களை விற்பனை செய்து வந்ததும் அவற்றை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்த 18-ஜெலடின் குச்சிகள், மின்கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

Story image