சாலை விபத்தில் சிக்கி அமமுக பிரமுகா் பலி

பழனியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகா் உயிரிழந்தாா்.

பழனி: பழனியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (48). இவா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேரூா் செயலராக இருந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பழனி ரயிலடி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மோதியது.

இதில் பலத்த காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com