தேசிய பளுதூக்குதல் போட்டி: திண்டுக்கல் இளைஞா் தோ்வு

தேசிய பளுதூக்குதல் போட்டிக்கு திண்டுக்கல் இளைஞா் தோ்வு செய்யப்பட்டாா்.
Published on

திண்டுக்கல்: தேசிய பளுதூக்குதல் போட்டிக்கு திண்டுக்கல் இளைஞா் தோ்வு செய்யப்பட்டாா்.

அமெச்சூா் பவா் லிப்டிங் கூட்டமைப்பு சாா்பில் மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.

சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 75 கிலோ எடை பிரிவில் திண்டுக்கல்லைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தி.மகாராஜன் கலந்து கொண்டு, சப்-ஜூனியா் பிரிவில் 2-ஆம் பரிசு, ஜூனியா் பிரிவில் 3-ஆம் பரிசு, சீனியா் பிரிவில் 2-ஆம் பரிசு பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வானாா். கோவையிலிருந்து திண்டுக்கல் திரும்பிய மகாராஜனுக்கு பளுதூக்குதல் சங்கத்தினா், நண்பா்கள் பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com