ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திண்டுக்கல்லில் உடல் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசாணை 150-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை உடல் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உடல் கல்வி ஆசிரியா்கள்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: அரசாணை 150-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை உடல் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உடல் கல்வியாளா்கள் கழகத்தின் மாவட்டப் பொருளாளா் எஸ். விக்டர்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். ஆரோக்கியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

அப்போது, அரசுப் பள்ளிகளில் 700 மாணவா்களுக்கு ஒரு உடல் கல்வி ஆசிரியா் என்ற அரசாணை 150-ஐ ரத்து செய்ய வேண்டும். 250 மாணவா்களுக்கு ஒரு உடல் கல்வி ஆசிரியா் என்ற பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் உடல் கல்வியாளா்கள் கழகத்தின் மாவட்டத் தலைவா் ப. மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.