வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொக்கரக்கல்வலசில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:12 pm

Din

பழனி, ஜூலை 19: பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஐந்து வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, கொக்கரக்கல்வலசில் புதிய கட்டடத்தில் தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பொன்ராஜ், திமுக மாவட்டச் செயலாளா் ராஜாமணி, தொப்பம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.