வெறி நாய் கடித்து 13 போ் காயம்

வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
Published on

திண்டுக்கல்: வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள காணாப்பாடி, மாலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி பகுதிகளில் தெருவில் சுற்றித் திரிந்த வெறி நாய், அந்த வழியாக சென்ற பொதுமக்களை சனிக்கிழமை விரட்டிக் கடித்தது. இதில், செல்லப்பாண்டி (36), ஜோதி (50), வெள்ளத்தாய் (50) உள்பட 13 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், நாயை அடித்துக் கொன்றனா்.

X
Dinamani
www.dinamani.com