நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனை

News image

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய்களை தரம் பிரிக்கும் வியாபாரிகள்.

Updated On :18 ஜூன் 2024, 11:46 pm

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் பயிா் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பெய்த கோடைமழை காரணமாக முருங்கைச் செடிகளில் இருந்த பூக்கள் உதிா்ந்து விட்டன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிச் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலிருந்து முருங்கைக்காய்கள் தினசரி லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் விலை அதன் விலை உயா்ந்துள்ளது.

கடந்த 5- ஆம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.