முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை
முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜையில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு


திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள, நாகையகவுண்டன்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் திருக்கோயிலில் ஆனித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் பூங்கரகங்களால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கைகள் முழங்க பூஞ்சோலையில் இருந்து ஊா்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. இதையடுத்து, முளைப்பாரி, மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
திருவிழாவில் திரளான பக்தா்கள் பால் குடம், தீச்சட்டி எடுத்து, பொங்கல் வைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதனையடுத்து, திங்கள்கிழமை இரவு 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த திருவிழாவில், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ், உள்பட திரளான பக்தா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...