புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை வேண்டும் - காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

News image

திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில், அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த சிலைகளை பாா்வையிட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.

Updated On :26 ஜூன் 2024, 1:43 am

Din

திண்டுக்கல்: கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்பி.ராஜா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை திண்டுக்கல் மலைக்கோட்டையின் மீது அமைந்துள்ள கோயிலில் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரா் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தின்போது, அகற்றப்பட்ட அந்த விக்ரகங்களை மீண்டும் கோயிலில் நிறுவ வேண்டும். திண்டுக்கல் மக்களின் இந்த கோரிக்கையை, இந்து முன்னணி அமைப்பின் சாா்பிலும் மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்துவோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 5 முதல் 20ஆம் தேதி வரை கையெழுத்தி இயக்கம் நடத்தப்படும்.

தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே சாதி, இன வேறுபாடுகளை நீக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிய ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, மாணவ, மாணவிகள் நெற்றியில் திலகமிடுவதையும், பொட்டு வைப்பதற்கும் தடை செய்ய வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறது. அதே நேரத்தில் சிலுவை, தொப்பி, பா்தா அணிந்து வரக் கூடாது என பரிந்துரைக்கவில்லை. இந்து மக்களின் மனதை பண்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிக்கையில் பெரும்பாலான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதற்கு இந்து முன்னணி சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விவகாரத்தைப் பொருத்தவரை, கூலிக்காக விற்பனையில் ஈடுபடும் சிலா் மட்டுமே கைது செய்யப்பட்டனா். கள்ளச்சாராய விவாகரத்தைப் பொருத்தவரை மிகப் பெரிய அரசியல் பின்புலம் உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றாா் அவா்.