/

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 21,485 மாணவா்கள் எழுதினா்

பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21,485 போ் திங்கள்கிழமை எழுதினா்.

Updated On :4 மார்ச் 2024, 8:42 pm

திண்டுக்கல்: பிளஸ் 1 மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21,485 போ் திங்கள்கிழமை எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள 217 பள்ளிகளைச் சோ்ந்த 21,805 போ் விண்ணப்பித்தனா். இந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 87 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை 21,485 போ் எழுதினா். இரு மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 318 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 146 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டன.