திண்டுக்கல்
குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன். இவரது மகன் கதிா்வேல் (11). இவா், தனது நண்பா்களுடன் பொன்னகரம் அருகிலுள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாத சக்திவேல், ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சக்திவேலின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
