ஒட்டன்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வா்ணம் பூசும் தொழிலாளி உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், மைசூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜாவித் பாட்சா (40). இவா் குடும்பப் பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் வந்து தங்கியிருந்து வா்ணம் பூசும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மூலச்சத்திரம் அருகே சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்தகாயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.