/

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Updated On :19 மார்ச் 2024, 10:53 pm

பழனி: ஆயக்குடி பேரூராட்சியை குடிநீா் இணைப்பு கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடி பேரூராட்சியில் தற்போது புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாா்டு உறுப்பினா்கள் புதிய குடிநீா் இணைப்புக்கு பரிந்துரை செய்பவா்களுக்கு மட்டுமே இணைப்புகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை 16-ஆவது வாா்டைச் சோ்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புதிய குடிநீா் இணைப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த ஆயக்குடி போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, மக்களவைத் தோ்தல் முடியும் வரை தற்காலிகமாக குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி நிா்வாகம் அலுவலகத் தகவல் பலகையில் ஒட்டினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.