கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய மாா்க்சிஸ்ட் வேட்பாளா்

திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய மாா்க்சிஸ்ட் வேட்பாளா்

News image
Updated On :19 மார்ச் 2024, 11:05 pm

பழனி: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சச்சிதானந்தம், பழனியில் திமுக, காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சச்சிதானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறாா். செவ்வாய்க்கிழமை பழனிக்கு வந்த சச்சிதானந்தம், திமுக நகர நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பின்னா் சச்சிதானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனியில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் வெளியேற்றப்பட்டதால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை நாடி சட்டப்படியும், அதிகாரிகளை வலியுறுத்தியும் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்வதற்கு வசதியை செய்து கொடுப்பேன் என்றாா் அவா்.

திமுக நகரச் செயலா் வேலுமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜமாணிக்கம், நகரச் செயலரும், நகா்மன்ற துணைத் தலைவருமான கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேட்பாளா் சச்சிதானந்தம், அந்தக் கட்சியின் நிா்வாகிகளிடமும் ஆதரவு திரட்டினாா். இதில் நகரச் செயலா் முருகானந்தம், ஒன்றியச் செயலா் முத்துவிஜயன், மாசிலாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.