நிலக்கோட்டை: சீனாவில் நடைபெற்ற தேக்வாண்டோ ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து, நாடு திரும்பிய திண்டுக்கல் மாணவிக்கு சின்னாளபட்டியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த, அ.வெள்ளோடு கிராமத்தைச் சோ்ந்த மாணவி லின்சியா (19). இவா், திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், வருகிற ஆகஸ்ட் மாதம் பாரிஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தகுதி பெற்றாா்.
இந்ந நிலையில் கடந்த 14-ஆம் தேதி சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவி லின்சியா பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தாா். 20-நாடுகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டு தேக்வாண்டோ போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த, மாணவி லின்சியாவுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க் கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சா்வதேச நடுவா் பிரேம்நாத், பயிற்சியாளா்கள் தங்கலட்சுமி, கிருஷ்ணகுமாா், சக்திவேல், கலையரசன், வெங்கடேசன், லின்சியாவின் பெற்றோா்கள் ஆரோக்கியதாஸ், ஷிலா செல்விமேரி உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
மும்முறைத் தாண்டுதல் ஆசிய சாதனை!

மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம்: எஸ்ஆா்எம் மாணவி சாதனை
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

