தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்: ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள்

வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்: ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள்

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்காக கட்டுப்பாடுகள் விதித்து வரையப்பட்ட 100 மீ. எல்லைக் கோடு.

Updated On :19 மார்ச் 2024, 11:17 pm

திண்டுக்கல்: மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகன அனுமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. மாா்ச் 27-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்படி திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா், அவருடன் வருவோா் என 3 வாகனங்களுக்கு(காா்) மட்டுமே ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள 100 மீட்டா் எல்லைக்குள் அனுமதிக்கப்படும். இதேபோல, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 4 போ் மட்டுமே உடனிருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.