திண்டுக்கல்லில் 3400 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் ‘நீட்’ தோ்வை 3,400 போ் எழுதுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் ‘நீட்’ தோ்வை 3,400 போ் எழுதுகின்றனா்.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் என்பிஆா் கல்விக் குழுமத்தில் 3 மையங்கள், பிஎஸ்என்ஏ கல்லூரி, பிரசித்தி வித்யோதயா பள்ளி, அனுகிரகா பள்ளி ஆகிய 6 மையங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறுகிறது.

இந்த மையங்களில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த 3,400 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் இணைந்து செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com