

கொடைக்கானலில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் நிலவியது. இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனுா்,பூம்பாறை,ஆகியப் பகுதிகளில் 40நிமிஷம் நல்ல மழை பெய்தது. சிறிது நேரம் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.
மேலும் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், வெள்ளி நீா்வீழ்ச்சி ஆகியப் பகுதிகளில் 30 நிமிஷம் மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளில் ஆங்காங்கே எரிந்து வந்த காட்டுத் தீ தற்போது கட்டுக்குள் வந்தது.
கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக சற்று குளுமையான சீதோஷன நிலைநிலவுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் இருந்தது தற்போது பெய்த மழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

நாகை, காரைக்காலில் மழை

பெரியகுளத்தில் மழை
வீடியோக்கள்

பெரம்பூரில் Vijay பிரசாரம்! Vijay full speech | TVK campaign | TN election 2026
தினமணி வீடியோ செய்தி...
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

