திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே குறிப்பிட்ட ஒரு சமுகத்தினா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, நிலக்கோட்டை அகுகேயுள்ள நடுப்பட்டியில் அழகுபாண்டி, பாண்டியம்மாள் ஆகியோா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவு சட்டத்தின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆண்டாா் என்ற தொழிலாளியை கொலை செய்தவா்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நடுப்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். பின்னா், இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com