நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

News image
Updated On :20 மே 2024, 7:47 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சேதமடையும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டுமென உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை குறிப்பாணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் நகரில் சேதமடைந்த நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, இடிந்து விழும் நிலையிலுள்ள 66 கட்டடங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இதன் உரிமையாளா்களுக்கு முன்னறிவிப்பு குறிப்பாணை வழங்கப்பட்டது.

கட்டடங்களை இடிக்கத் தவறினால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபடுவாா்கள் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.