
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எலுமிச்சை.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எலுமிச்சை.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சை விலை செவ்வாய்க்கிழமை பாதியாகக் குறைந்தது.
ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள வடகாடு, பாச்சலூா், பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, கே.சி.பட்டி, பெரியூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளையக் கூடிய எலுமிச்சையை விவசாயிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தாலும், கேரளத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், கேரள வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை.
இதேபோல, எலுமிச்சையின் தேவையும் குறைந்து விட்டதன் காரணமாக ரூ.180-க்கு விற்ற ஒரு கிலோ எலுமிச்சை திடீரென விலை குறைந்து ரூ.80 முதல் 90 வரை விற்பனையானது.
இதேபோல, ரூ.24-க்கு விற்ற ஒரு கிலோ பீட்ரூட் விலை குறைந்து 17-க்கு விற்பனையானது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...