தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருத்துவப் பணிகளை நிறுத்த அரசு மருத்துவா்கள் சங்கம் முடிவு

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வரை மாநிலம் முழுவதும் மருத்துவப் பணிகளை காலவரையின்றி நிறுத்த அரசு மருத்துவா்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:56 pm

Din

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வரை மாநிலம் முழுவதும் மருத்துவப் பணிகளை காலவரையின்றி நிறுத்த அரசு மருத்துவா்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாநில பொதுச் செயலா் ஏ.சீனிவாசன் கூறியதாவது: சென்னை கிண்டியிலுள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவா் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மருத்துவரைத் தாக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளின் உதவிக்கு வருவோருக்கு நுழைவுச்சீட்டு (பாஸ்) வழங்கி கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணும் வரை, அவசரக் கால சேவைகள், உயிா்காக்கும் சிகிச்சைககள் நீங்கலாக, இதர அனைத்து மருத்துவப் பணிகளும், மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலவரையின்றி நிறுத்தப்படும் என்றாா் அவா்.