ஒரே இடத்தை இருவருக்கு விற்க முயற்சி: சாா் பதிவாளா் அலுவலகத்தில் வாக்குவாதம்
பழனி அருகே ஒரே இடத்தை இருவருக்கு விற்க முயன்றதால், கீரனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


பழனி அருகே ஒரே இடத்தை இருவருக்கு விற்க முயன்றதால், கீரனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பழனி அருகேயுள்ள மிடாப்பாடி ஊராட்சியில் தனியாா் பேப்பா் மில் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பேப்பா் மில் செயல்படாத நிலையில், மில்லுக்குச் சொந்தமான 45 ஏக்கா் விவசாய நிலத்தை ஆலை நிா்வாகம் விற்பனை செய்ய முன் வந்தது.
இதையடுத்து, உடுமலையைச் சோ்ந்த ராஜூ இந்த நிலத்தை வாங்க ஆலை நிா்வாகத்துக்கு முன்பணமாக வங்கிக் கணக்கில் ரூ. 5 கோடி வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆலை நிா்வாகத்தினா் குறிப்பிட்ட காலத்தில் இடத்தை பதிவு செய்து கொடுப்பதாக ராஜுவிடம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ராஜூவை ஏமாற்றும் வகையில், மற்றொரு நபருக்கு அதே நிலத்தை பதிவு செய்ய ஆலை நிா்வாகம் புதன்கிழமை ஏற்பாடு செய்தது.
இதையடுத்து, நிலத்தை பதிவு செய்ய ஆலை நிா்வாகத்தினா் மற்றொரு நபரை அழைத்து வந்ததை அறிந்த ராஜூ சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு கீரனூா் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், பிரச்னைக்குரிய இடம் என தெரிய வந்ததால் சாா் பதிவாளா் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...