தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது
பழனி அருகே தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.


பழனி அருகே தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கீரனூா், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்த நிலையில், சத்திரப்பட்டி பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் நிறுத்தினா். ஆனால், அவா்கள் இருவரும் போலீஸாரிடம் இருந்து
தப்பிக்க முயன்ற போது, வேகத் தடையில் மோதி கீழே விழுந்ததில் கால் முறிந்தது. பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில் இவா்கள் இருவரும் தென்காசி, ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த அருள்குமாா் (28), பேச்சிமுத்து (27) என்பதும், தொடா் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டனா் என்பதும் தெரியவந்தது.
காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஏழு பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...