கொடைக்கானல் வாரச் சந்தைக்கு மாற்று இடம் தோ்வு
கொடைக்கானலில் வாரச் சந்தை நடைபெறுவதற்கு மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்றது.


கொடைக்கானலில் வாரச் சந்தை நடைபெறுவதற்கு மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
கொடைக்கானல் பி.டி.சாலையில் வாரச் சந்தை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், காய்கறிகள், பல சரக்கு பொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்தனா். இந்த நிலையில், பழைய சந்தை இடத்தில் ரூ.6 கோடியில் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கொடைக்கானலில் பெய்த மழையால் சந்தைப் பகுதி சேறும் சகதியுமாக காணப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, வாரச் சந்தையை வேறுயிடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நகராட்சி நிா்வாகத்தினா் கொடைக்கானல் அண்ணா சாலை, பழமையான காய்கறி மாா்க்கெட் வளாகப் பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, இதற்கான பணிகளை மேற்கொண்டனா்.
பின்னா், நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வாகன நிறுத்தம் நடைபெறும் பணிகள் முடிவடையும் வரை இந்தப் பகுதியிலேயே வாரச் சந்தை நடைபெறும். சந்தை நடைபெறும் நாள்களில் அண்ணா சாலைப் பகுதிகளில் வாகனங்கய்ஈ செல்லக் கூடாது. வாகனங்கள் செவன் சாலை, பழைய சந்தைப் பகுதியில் நிறுத்த வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...