பயன்பாட்டுக்கு வந்த பழனி ரோப்காா்
பழனி மலைக் கோயில் ரோப்காா் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவுற்று, புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

பழனி ரோப்காருக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை.

பழனி ரோப்காருக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை.
பழனி மலைக் கோயில் ரோப்காா் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் நிறைவுற்று, புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் செல்ல படிப் பாதை, மின்இழுவை ரயில், ரோப்காா் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இதில் ரோப்காா் மூலம் மலைக்கோயிலுக்கு விரைவாகவும், எளிதாகவும் இரண்டு நிமிடங்களில் சென்று வரலாம். இதனால், முதியோா், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வரப்பிரசாதமாக இந்த ரோப்காா் உள்ளது.
இந்த நிலையில், ரோப்காா் தினமும் ஒரு மணி நேரமும், மாதம் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் வருடாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப்காா் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ரோப் காரில் 45 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளின் போது பழுதடைந்த மோட்டாா், சாஃப்ட், இரும்பு வட கம்பி உள்ளிட்டவை புதியதாக மாற்றப்பட்டு பொறியியல் வல்லுனா்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது.
தொடா்ந்து, ரோப்காா் பெட்டிகள் மாற்றப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. கடந்த இரு நாள்களாக சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில், வல்லுனா் குழு ஒப்புதலைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் ரோப்காா் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முன்னதாக, ரோப்காா் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னா், பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...