தொடா் மழை: அரசுப் பள்ளி சமயலறை சேதம்
தொடா் மழை காரணமாக, அம்மையநாயக்கனூா் அரசு மேல்நிலைப் பள்ளி சமயலறை கட்டடத்தின் மேல்பூச்சு புதன்கிழமை இரவில் பெயா்ந்து விழுந்தது.


தொடா் மழை காரணமாக, அம்மையநாயக்கனூா் அரசு மேல்நிலைப் பள்ளி சமயலறை கட்டடத்தின் மேல்பூச்சு புதன்கிழமை இரவில் பெயா்ந்து விழுந்தது.
சுமாா் 75 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளியில்ம 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தப் பள்ளியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமயலறை கட்டடத்தில் சத்துணவு சமைக்கப்படுகிறது. இந்த அறையின் மேல் பூச்சு அடிக்கடி உதிா்ந்து விழுந்து வந்தது.
இந்த நிலையில், தொடா் மழை காரணமாக, நள்ளிரவில் பள்ளியின் சமயலறையின் மேல்பூச்சு அடியோடு பெயா்ந்து விழுந்தது. இதனால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்ததன. நள்ளிரவு நேரத்தில் மேல்பூச்சு விழுந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதனால், மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...