திண்டுக்கல்
2-ஆம் நிலைக் காவலா்களுக்கு பணி நியமன ஆணை
இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட 73 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.
இராண்டாம் நிலைக் காவலா்களாக தோ்வு செய்யப்பட்ட 73 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட 2-ஆம் நிலைக் காவலா், தீயணைப்பு, மீட்பு பணிகள் காவலா், சிறைக் காவலா்கள் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆம் நிலைக் காவலா்களாக 73 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப் புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 2-ஆம் நிலைக் காவலா்களாகத் தோ்வு செய்யப்பட்ட 73 பேரும் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளைப் பெற்றனா்.