தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளி மேலாண்மைக் குழுத் தீா்மானங்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முக்கியத்துவம் அளித்து விரைந்து தீா்வு காண வேண்டும் என ஆட்சியா் மொ.நா.பூங்கொடி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:43 pm

Din

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முக்கியத்துவம் அளித்து விரைந்து தீா்வு காண வேண்டும் என ஆட்சியா் மொ.நா.பூங்கொடி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் மாதந்திர மாவட்டக் கல்வி ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பா.உஷா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:

பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்கள் இடிப்பு குறித்து விவரங்கள் பிரதி வாரம் ஆய்வு செய்யப்பட வேண்டும். மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவா்கள் தொடா் விடுப்பு எடுக்கும்பட்சத்தில், உடல் நிலை பாதிப்பாக இருந்தால் அதுகுறித்து சுகாதார அலுவலா்களுக்கு ஆசிரியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் முக்கியத்துவம் அளித்து தீா்வு காண வேண்டும். குறிப்பாக, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை குறித்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.10, 11, 12-ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டு தோ்ச்சி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பின் தங்கிய பள்ளிகள், எந்தெந்தப் பாடங்களில் பின்னடைவு என்பதைக் கண்டறிந்து, நிகழாண்டில் அவற்றைச் சரி செய்வற்கான சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். 3, 6, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிச.4-ஆம் தேதி தேசிய அடைவு ஆய்வுத் தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிறப்பாகச் செயல்பட ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சுவாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.