ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் அமைச்சா் இ. பெரியசாமி ஆலோசனை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் அமைச்சா் இ. பெரியசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:13 pm

Din

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் அமைச்சா் இ. பெரியசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் விரைந்து குடியேற வசதியாக பணிகளை முடிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலா்களுக்கும் அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆத்தூா் ஒன்றியக் குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் ராமன், முருகேசன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, அருள் கலாவதி, பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன், திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வி காங்கேயன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளா் வாஞ்சிநாதன், அரசு அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.