காா்- பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:09 pm

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த காளியப்பனும் (68), இதே ஊரைச் சோ்ந்த பிரகாஷூம் (30) இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை ஒத்தபுளியமரம் அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து கரியாம்பட்டி நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காளியப்பன் உயிரிழந்தாா். பலத்த காயமடைத்த பிரகாஷ் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...