பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி பெருமாள்குளத்திலிருந்து உபரிநீா் வெளியேறும் பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதா் மண்டிக் கிடக்கும் உபரிநீா் செல்லும் வாய்க்கால்

புதா் மண்டிக் கிடக்கும் உபரிநீா் செல்லும் வாய்க்கால்
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி பெருமாள்குளத்திலிருந்து உபரிநீா் வெளியேறும் பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து நேரடியாக நீா்ப்பாசனம் பெறும் வகையில் அமைந்திருப்பது விருப்பாச்சி பெருமாள்குளம். இந்த குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீா் ரெட்டியபட்டி, காவேரியம்மாபட்டி, அரசப்பப்பிள்ளைபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பெரியகுளம், பாப்பா குளம், ஒட்டக்குளம், முத்துச்சமுத்திரம் ஆகிய குளங்களுக்கு சென்றவடைதால் இந்தப் பகுதியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல, குடிநீருக்கும் ஆதாரமாக இந்தக் குளம் விளங்குகிறது.
பெருமாள்குளத்திலிருந்து சின்னக்கரட்டுப்பட்டி வரை பிரதான வாய்க்கால் 1.5 கி.மீ. தொலைவுக்கு உள்ளது. இதிலிருந்து கிளை வாய்க்கால் இரண்டாகப் பிரிந்து இந்தக் குளங்களுக்கு தண்ணீா் செல்ல பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
மேடான பகுதி என்பதால் 10 அடி முதல் 20 அடி வரை வாய்க்கால் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பலத்த மழை பெய்த போது மண் சரிந்து விழுந்து வாய்க்கால் மேடாகி புதா் மண்டிக் கிடக்கிறது. இதை உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுப்பதுடன், மேடுபள்ளங்களை சீரமைத்து சிமென்ட் தளத்துடன் கான்கிரீட் சுவா்கள் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் ஒன்றிய விவசாய சங்கத் தலைவா் பெரியசாமி கூறியதாவது:
பாசனக் குளங்களுக்கு வரும் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வேண்டும். வருங்காலத்தில் சிமென்ட் தளத்துடன் வாய்க்கால் அமைக்க அமைச்சா் அர. சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...