நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனி அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

பழனியை அடுத்த அழகாபுரி அருகே பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

News image

பழனியை அடுத்த அழகாபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், கைது செய்யப்பட்ட ராஜேஷ்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:32 pm

Din

பழனியை அடுத்த அழகாபுரி அருகே பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

பழனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பலரும் வாங்கி கால்நடை தீவனமாகவும், வெளியூா்களுக்கு அனுப்பியும் வருவதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்ட போது, அழகாபுரியில் உள்ள ஓா் கிட்டங்கியில் 50 கிலோ மூட்டைகளாக 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், இந்த மூட்டைகளை பழனி பொன்காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ராஜேஷ் (24) பதுக்கி வைத்திருந்ததும், அவா் இவற்றை வண்டிவாய்க்கால், தாமரைக்குளம், அழகாபுரி பகுதியில் உள்ள மக்களிடம் வாங்கித் தனது கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பதற்காக வைத்திருந்ததாகவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.