கோம்பைப்பட்டியில் காட்டு யானை
பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் ஒரு வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த சோள மாவு மூட்டைகளை இழுத்து வெளியில் போட்டு சாப்பிட்டது.


பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் ஒரு வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை அங்கிருந்த சோள மாவு மூட்டைகளை இழுத்து வெளியில் போட்டு சாப்பிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மேற்குமலைத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மலையடிவாரத்தில் நடமாடும் யானைகள் கூட்டம் கோம்பைப்பட்டி, அண்ணாநகா், சட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
தற்போது, மழைகாலம் என்பதால் பல யானைகள் அடிவாரத்திலேயே தங்கியுள்ளன. கோம்பைப்பட்டியில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த மக்காச்சோள மாவு மூட்டைகளை இழுத்து வெளியேபோட்டு சாப்பிட்டுச் சென்றது. அண்மைகாலமாக வீடுகள் வரை யானைகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி வாழ் மக்கள் அஞ்சுகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...